பெற்ற தந்தையை லாரி ஏற்றிக்கொலை செய்த மகன் கைது

காஞ்சிபுரம் அருகே நிலத்தகராறில் பெற்ற தந்தையை லாரி ஏற்றிக்கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
தேவரியம்பாக்கத்தை சேர்ந்த எத்திராஜ் என்ற முதியவருக்கு, 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எத்திராஜின் இளைய மகனான ராமச்சந்திரன், நேற்றிரவு தனக்கு உரிய நிலத்தை பிரித்து கொடுக்குமாறு கேட்டு, தந்தையிடம் தகராறு செய்துள்ளார். ராமச்சந்திரன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மதுபோதையில் சுற்றித்திரிவதால், நிலத்தை பிரித்துக் கொடுக்க முடியாது என முதியவர் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், இன்று காலை முதியவர் வயலுக்கு சென்ற நேரத்தில், லாரியை விட்டு ஏற்றி, தந்தை என்றும் பாராமல் எத்திராஜை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Comments