பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிய நில அளவையாளர்.. கழிவுநீர் கொட்டியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்..!

0 1449

அரக்கோணம் அடுத்த மேல்பாக்கத்தில், பக்கத்து வீட்டுக்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தலைமறைவான நில அளவையாளரையும், அவரது மகனையும் போலீசார் தேடிவருகின்றனர்.

நெமிலி வட்ட நில அளவையாளராக உள்ள அருள் என்பவருக்கும், பக்கத்து வீட்டுக்காரரான கருணாகரனுக்கும் 3 ஆண்டுகளாக இடத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இன்று காலை, அருள் தமது வீட்டு கழிவு நீரை சாலையில் கொட்டியபோது, அது கருணாகரன் வீட்டு வாசலில் தேங்கியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது அருள், அரிவாளால் கருணாகரனை வெட்டியதாகவும், அவரது மகன் அபிஷேக், கருணாகரனின் மனைவி துளசியைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

கணவனும், மனைவியும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், நில அளவையாளர் அருளையும், அவரது மகன் அபிஷேக்கையும் போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments