மழைநீரால் அழுகிய நெற்பயிர்களை கண்டு கதறி அழுத பெண்கள்..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழையின் காரணமாக விளைநிலங்களில் தேங்கிய மழை நீரால் அழுகிய நெற்பயிர்களை கண்டு பெண்கள் வேதனையுடன் கதறி அழுதனர்.
கீழ்வேளூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருக்கண்ணங்குடி, சங்கமங்களம், ஆவராணி புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த தாளடி மற்றும் சம்பா நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின.
நகைகளை அடகு வைத்தும், வட்டிக்கு கடன் வாங்கியும் சாகுபடி செய்த நெற்பயிர்கள் சேதமானதால் தங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக வேதனை தெரிவித்துனர்.
விவசாயிகளின் தற்கொலையை தடுக்கும் வகையில் தமிழக அரசு பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments