கையில் கத்தியுடன் மார்க்கெட்டில் பொதுமக்களை மிரட்டி வந்த ரவுடி.. துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த போலீஸ்..!

கர்நாடகாவில் மார்க்கெட் பகுதியில் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டி வந்த இளைஞரை, போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
கல்புர்கி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சந்தையில் நேற்றிரவு 9 மணியளவில் அதேப்பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்துல் ஜாபர் என்பவன், கையில் கத்தியை வைத்துக்கொண்டு அங்கிருந்தவர்களை மிரட்டிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனடியாக மார்க்கெட்டிற்கு சென்ற போலீசார், கத்தியை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி அப்துல்ஜாபரை எச்சரித்தனர். ஆனால், அவன் காவல்துறையினரையும் தாக்க முயற்சித்ததால், அவனது காலை குறிபார்த்து போலீசார் சுட்டனர்.
இதனால், காலில் காயம்பட்டு கீழே சுருண்டு விழுந்தவனை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Comments