துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்.. தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை..!
துருக்கி, சிரியா நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கத்திற்கு, 500க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று அதிகாலை துருக்கியின் நுர்டாகி நகருக்கு அருகே சுமார் 18 கிலோ மீட்டர் ஆழத்தில், 7 புள்ளி 8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் நிகழ்ந்ததை தொடர்ந்து, அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் 6 புள்ளி 7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் உலுக்கியது.
துருக்கி மட்டுமல்லாது, அண்டை நாடான சிரியாவிலும் சக்தி வாய்ந்த நில அதிர்வுகள் உணரப்பட்டன. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில், துருக்கியில் 300க்கும் மேற்பட்டோரும், சிரியாவில் 200க்கும் மேற்பட்டோரும் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.
துருக்கியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துருக்கியில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments