வடலூரில் நடைபெற்ற தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களை இசையால் பரவசப்படுத்திய டிரம்ஸ் சிவமணி..!

0 1134

கடலூர் மாவட்டம் வடலூரில் நடைபெற்ற 152 வது தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பங்கேற்ற டிரம்ஸ் சிவமணி திடீரென பக்தர்களிடையே ட்ரம்ஸ் வாசித்தார்.

வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 152 வது தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை ஐந்தரை மணி வரை ஆறு காலங்கள் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் நடைபெற்ற ஜோதி தரிசனத்தில் பிரபல டிரம்ஸ் இசை கலைஞர் சிவமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்று முழக்கமிட்டவாறு ட்ரம்ஸை வாசித்ததை அங்கிருந்தவர்கள் மெய் மறந்து ரசித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments