ராமநாதபுரத்தில் பருவமழை பொய்த்ததால் 84,000 ஹெக்டர் பரப்பளவு பயிர்கள் கருகின..!

பருவமழை பொய்த்து போனதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 84 ஆயிரம் ஹெக்டர் அளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகின.
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்தஅக்டோபர் 29-ந்தேதி தொடங்கியது.இதனை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 34 ஹெக்டேரில் நெல்விவசாயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் பருவமழை பொய்த்து போனதால் கதிர் வரும் நேரத்தில் பயிர்கள் அனைத்தும் கருகி காட்சியளிக்கின்றன.
இதனால் விவசாயத்தை மட்டுமே நம்பி நகைகளை வங்கியில் அடகுவைத்து, வட்டிக்கு பணம் வாங்கி விவசாயம் செய்தவர்களுக்கு ,பிரதமரின் விவசாய திட்டத்தின கீழ் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments