சேலத்தில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை.. 6 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு..!

சேலம் அருகே பிரபல ரவுடி ஆனந்தனை வெட்டிக் கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
காட்டூரைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் மீது கொலை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் நேற்றிரவு 10 மணி அளவில் உறவினர் வீட்டுக்கு பிரபாகரன் என்பவருடன் ஆனந்தன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
காட்டூர் பகுதியில் சென்ற போது பின்னால் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஆனந்தனை தலை உள்பட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டது.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஆனந்தன் உயிரிழந்த நிலையில், கொலைக்கு முன்விரோதம் காரணமா அல்லது நிலப் பிரச்சினை காரணமா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments