திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேரை வெடிகுண்டு வீசி கொலை செய்த மர்ம நபர்கள்..!

மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் 2 பேர் வெடிகுண்டுகளை வீசி கொலை செய்யப்பட்டனர்.
பிர்பூம் மாவட்டத்தில் நடந்து வரும் பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பணிகளுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த அவர்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் படுகாயமடைந்த 2 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த கொலைகளின் பின்னணியில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியினரும் இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
அதேநேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நிலவும் உள்கட்சி மோதலே கொலைக்கு காரணமென பாஜகவும், காங்கிரஸும் பதிலடி கொடுத்துள்ளன.
Comments