'மார்பிங்' புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவதாக கூறி இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்த இரு சகோதரர்கள் கைது..!

சமூக வலைத்தளங்கள் மூலம் இளம்பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களின் புகைப்படங்களை பெற்று, பின் அவற்றை ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறித்துவந்த இரு சகோதர்களை, காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திரைப்பட நடிகர் கனா தர்ஷன் எனக்கூறி பேஸ்புக்கில் அறிமுகமான நபர், தனது புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, 2 லட்ச ரூபாய் பறித்ததாக இளம்பெண் ஒருவர் போலீசில் புகாரளித்தார்.
தொழில் நுட்ப ரீதியாக விசாரணை நடத்திய காஞ்சிபுரம் சைபர் கிரைம் போலீசார், ஈரோடு பி.பி.அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த அலாவுதீன், வாகித் ஆகிய இரு சகோதரர்களையும் ஈரோடு சென்று கைது செய்தனர்.
பல பெண்களிடம் இதே பாணியில் அவர்கள் பணம் பறித்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
Comments