பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது..!

0 2648

சென்னை, குரோம்பேட்டையில் பத்தாம் வகுப்பு மாணவியை கத்திமுனையில் அழைத்து சென்று மதுவில் போதை மருந்து கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்த திமுக பிரமுகரின் மகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அஸ்தினாபுரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவி, வகுப்பில் சோர்வாக இருந்ததால் ஆசிரியர் அவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது, அஸ்தினாபுரம் 25வது வார்டு திமுக வட்ட பிரதிநிதி துரை என்பவரின் மகன் விக்கி, தன்னை வழிமறித்து நட்பாக பேசுமாறு கேட்டதற்கு மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளார்.

மேலும், இதைப்பற்றி பெற்றோரிடம் கூறினால் அவர்களை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெற்றோரிடம் ஆசிரியர் இந்த தகவலை தெரிவித்ததையடுத்து, அவர்கள் மாணவியிடம் விசாரித்ததில் 6 மாதமாக விக்கி மிரட்டி அத்துமீறியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சிட்லபாக்கம் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து தலைமறைவான விக்கியை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments