அதானி குழும பங்குகள் சரிவு - நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து நிதிக் கண்காணிப்பு அமைப்பான செபி கருத்து..!

அதானி குழும பங்குகள் சரிவு - நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியைத் தொடர்ந்து நிதிக் கண்காணிப்பு அமைப்பான செபி கருத்து..!
நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கி போன்றவை பங்குச் சந்தைகள் மற்றும் வங்கிகள் அமைப்பு ஸ்திரமாக இருப்பதாக உறுதியளித்துள்ளதையடுத்து, பங்குச் சந்தை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுவதாக செபியும் தெரிவித்துள்ளது.
அதானி குழுமத்தின் மீதான சர்ச்சைக்குரிய ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்குகள் சந்தையில பெரும் சரிவு கண்டுள்ளன.
முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இது தொடர்பாக நிதிக் கண்காணிப்பு அமைப்பான செபி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
தேசியப் பங்குச் சந்தை நிப்டியும் மும்பைப் பங்குச் சந்தையான சென்செக்சும் பலமாக இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பங்குகளின் விலை மாற்றம் இறக்கம், போன்றவை காரணமாக எந்த வகையிலும் வர்த்த முறையை பாதிக்காது என்று செபி விளக்கம் அளித்துள்ளது.
Comments