சேலம் மாவட்டத்தை சேர்ந்த செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய இபிஎஸ்

0 947

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளருக்கான ஆதரவு கடிதம் பெறுவது குறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்து தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறுகிய காலத்தில் பொதுக்குழுவைக் கூட்டி வேட்பாளர் நியமனம் சாத்தியமில்லாத நிலையில், அந்தந்த மாவட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த வேட்பாளருக்கு ஆதரவு கடிதம் பெற்று அதிமுக தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், ஒப்புதல் பெறுவதற்கான படிவத்தை நிரப்பி சேலம் மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments