நகர்மன்ற கூட்டத்தில் 2 சுயேட்சை கவுன்சிலர்கள் தற்கொலை முயற்சி.. கன்னியாகுமரியில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பெண் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ((நகர்மன்ற தலைவர் அருள் சோபன் தலைமையில் நடைபெற்ற மாதாந்திர நகர்மன்ற கூட்டத்தின்போது, 4 மற்றும் 13-வது வார்டு சுயேட்சை கவுன்சிலர்கள் மும்தாஜ் மற்றும் சபீனா ஆகியோர் தங்கள் வார்டுகளில் முறையாக சாலை வசதி செய்துதரப்படாமல் புறக்கணிக்கப்படுவதாக நகர்மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.)) சாலை பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனக் கூறியதை ஏற்க மறுத்த அவர்கள், ஏற்கனவே கேனில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். அதனை தடுக்க வந்த நகர்மன்ற தலைவரையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நகர்மன்ற தலைவர் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர்கள் மும்தாஜ், சபீனா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் நகராட்சி கூட்டத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட இரண்டு பெண் கவுன்சிலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாலை பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனக் கூறியதை ஏற்க மறுத்த அவர்கள், ஏற்கனவே கேனில் எடுத்து வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.
அதனை தடுக்க வந்த நகர்மன்ற தலைவரையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொன்று விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நகர்மன்ற தலைவர் அளித்த புகாரின் பேரில், கவுன்சிலர்கள் மும்தாஜ், சபீனா மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments