திருநெல்வேலி, தென்காசியில் பரவி வரும் மர்ம காய்ச்சல்... 70க்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனத் தகவல்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலங்குளம், அரியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவிலான குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மர்ம காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக 70-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 40 குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Comments