அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு.. அறிவியல் ஆசிரியர், பக்கத்து வீட்டில் வசிப்பவர் கைது..!

திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அறிவியல் ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய சதீஷ் குமாரும், பக்கத்து வீட்டில் வசித்துவரும் சந்திரசேகர் என்பவரும் வெவ்வேறு தருணங்களில் 14 வயது மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
இதில், சந்திரசேகர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது பாலியல் தொந்தரவு அளித்தது உறுதிசெய்யப்பட்டதால் அவரை போலீசார் கைது செய்தனர். சம்பந்தப்பட்ட அரசுப்பள்ளியில் நேரில் விசாரணை நடத்திய போலீசார், ஆசிரியர் சதீஷ் குமாரையும் கைது செய்தனர்.
Comments