அறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் இபிஎஸ்..!

தமிழக முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
Comments