சிலியில் கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத்தீ - 700 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்து நாசம்..!

தென் அமெரிக்க நாடான சிலியில், கொளுந்துவிட்டு எரிந்துவரும் காட்டுத் தீயில் 700 ஹெக்டேர் வனப்பகுதி தீக்கிரையானதுடன், அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும் எரிந்து சாம்பலாகின.
சிலான் நகருக்கு அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ வேகமாக நகர்ந்து சிலான், சிலான் விஜோ மற்றும் குய்ரிஹூ உள்ளிட்ட பகுதிகளிலுள்ள குடியிருப்புகளையும் சூழ்ந்தது.
வீடுகளை இழந்த மக்கள் முகாம் வாசிகளாக மாறினர். வெப்ப அலையால் அதி தீவிரமாகப் பரவிவரும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Comments