ஆஸ்திரேலியா கரன்சி நோட்டுகளில் இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் புகைப்படம் நீக்கம்..!

0 1484

ஆஸ்திரேலிய கரன்சி நோட்டுகளில் இருந்து இங்கிலாந்து அரசர் 3ம் சார்லசின் புகைப்படத்தை நீக்குவது என அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

மறைந்த ராணி எலிசபெத் உருவப் படங்கள் பதித்த கரன்சி நோட்டுகள் ஆஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன.

அவரது மறைவுக்கு பின்னர், பழைய கரன்சி நோட்டுகளில் இருந்த ராணி உருவப் படத்திற்கு பதிலாக, இங்கிலாந்து அரசராக பதவியேற்ற 3ம் சார்லஸின் படங்களை இடம்பெற செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிவரும் காலங்களில் கரன்சி நோட்டுகளில் 3ம் சார்லஸின் புகைப்படம் இடம்பெறாது எனவும், புதிய ஆஸ்திரேலிய டாலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments