வேலூரில் “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் முதல் கூட்டம்.. மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு..!

பட்டா மாறுதல், சான்றிதழ்களுக்காக பொதுமக்கள் அலைய வைக்கப்படுவதாக தகவல் வருவதால் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் .
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2ம் நாளாக ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், அரசு அதிகாரிகள், அரசாணைகளை மட்டும் செயல்படுத்துபவர்களாக இல்லாமல், கனவுத் திட்டங்களை அரசுக்குச் சொல்லி, அதனையும் செயல்படுத்த முனையும் திறன் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments