திருமணமான பெண்ணுடன் லிவிங் டுகெதர் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை.. குழந்தையை தவிக்க விட்டதால் ஆத்திரம்..!

சென்னை புழல் அருகே காதலியுடன் பைக்கில் சென்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கணவனை பிரிந்து முன்னாள் காதலனை தேடிச்சென்ற பெண்ணால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்தச் சம்பவம்
சென்னை அருகே புழல் அடுத்த லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதாசந்தர். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த 31ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் ராகவி என்ற பெண்னுடன் சென்ற போது வில்லிவாக்கம் சாலையில் ஆட்டோவில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சுதாசந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு ஆட்டோவில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பி சென்றது.
இந்த கொலை சம்பவம் குறித்து புழல் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
ராகவியும், சுதாசந்தரும் காதலித்து வந்த நிலையில் அந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராகவியின் பெற்றோர் 2 வருடங்களுக்கு முன்பு அவரை ஆவடி அடுத்த வெள்ளச்சேரியை சேர்ந்த வசந்த் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ராகவிக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில், சுதாசந்தருடனான காதலை செல்போனில் தொடர்ந்து வந்ததால், கணவனுடன் அடிக்கடி சண்டியிட்டு வந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக கணவனை பிரிந்த ராகவி, தனது குழந்தையை கணவன் வீட்டில் தவிக்க விட்டு, சிங்கிளாக தாய் வீட்டிற்கு திரும்பி உள்ளார். தாய் வீட்டில் தங்காத ராகவி, காதலன் சுதாசந்தருடன் வினாயகபுரம் பகுதியில் தனி வீடு எடுத்து லிவிங் டுகெதராக வசித்து வந்துள்ளார்.
ராகவியின் நடவடிக்கை வெள்ளச்சேரி பகுதியில் வசித்து வரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு கடும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. ராகவியை மீண்டும் வீட்டிற்கு திரும்ப வர வைப்பதறகாக அவரது உறவினர்கள் சேர்ந்து காதலன் சுதாசந்தரை தீர்த்துக்கட்டியது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராகவியின் அண்ணண் வெள்ளச்சேரியை சேர்ந்த ராபின் என்கிற பரத், சுஷ்மிதா, ராகவியின் சித்தப்பா உதயராஜ் , ஒரகடம் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் ஆகியோரை கைது செய்ததோடு இரண்டு பட்டாக்கத்திகளையும், தப்பிச்செல்ல பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கணவனை பிரிந்து முன்னாள் காதலனை தேடிச்சென்ற ராகவியால் இந்த கொலை நடந்திருப்பதால் அவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments