தனியார் உணவகம் நடத்திய சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி.. ருசித்து ஒரு பிடி பிடித்த அசைவ பிரியர்கள்..!

நாமக்கல்லில் உள்ள தனியார் உணவகத்தில் நடைபெற்ற சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டியில் அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மோகனூர் சாலையில் உள்ள உணவம் ஒன்று, பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தியது. இப்போடியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 99 ரூபாய் நுழைவுக் கட்டணம் செலுத்தி முன் பதிவு செய்த நிலையில், முதலில் பதிவு செய்த 35 பேர் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர்.
நாமக்கலை சேர்ந்த சரவணன் என்பவர் நிர்ணயிக்கப்பட்ட 20 நிமிடங்களில், 2 புள்ளி 600 கிலோ கிராம் பிரியாணி சாப்பிட்டு முதலிடம் பிடித்தார். அவருக்கு ஐந்தாயிரத்து ஒரு ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.
Comments