காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதியிடமிருந்து முதல்முறையாக, பாடி-ஸ்பிரே வடிவிலான வெடிகுண்டு பறிமுதல்..!

காஷ்மீரில் பிடிபட்ட பயங்கரவாதியிடமிருந்து முதல் முறையாக பாடி ஸ்பிரே வடிவிலான வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21 ஆம் தேதி, காஷ்மீரின் நார்வால் பகுதியில் நிகழ்த்தப்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பாக ஆரிப் அகமது என்பவனை போலீசார் கைது செய்தனர்.
அரசு ஊழியரான ஆரிப் அகமது, பாகிஸ்தானிலிருந்து லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பினர் பிறப்பித்த உத்தரவின் பேரில் இரட்டை குண்டுவெடிப்பை நிகழ்த்தியுள்ளான்.
அவனிடமிருந்து பாடி ஸ்பிரே வடிவிலான வெடிகுண்டை கைப்பற்றிய போலீசார், அதனை திறந்தாலோ அல்லது பாடிஸ்பிரே போல் அடித்தாலோ வெடித்து சிதறிவிடும் என தெரிவித்தனர்.
Comments