கான்கிரீட் கலவை வாகனம் கார் மீது கவிழ்ந்ததில் தாய், மகள் உயிரிழப்பு..!

பெங்களூருவில் கான்கிரீட் கலவை வாகனம் கவிழ்ந்ததால் அடியில் சிக்கி அப்பளம் போல நொறுங்கிய காருக்குள் சிக்கிய தாயும், மகளும் உயிரிழந்தனர்.
பன்னார்கட்டா சாலையில் காகலிபுரா என்ற பகுதியில் காயத்ரி என்பவர் மகள் சமந்தாவை காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்ற போது, காரின் எதிர்புறம் மிக வேகமாக வந்த கான்கிரீட் கலவை லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது சாய்ந்து கவிழ்ந்தது
இந்த கோர விபத்தில் தயும் மகளும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். நான்கு மணி நேரம் போராட்டத்துக்கு பின்னர் கிரேன் மூலம் லாரியை அகற்றி, இருவரின் உடல்களையும் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
Comments