மாப்பிள்ளைக்கு அவ்ளோ வெறி.. தாலி கட்டிய கையோடு ரேக்ளா வண்டியில் டூயட்..! விவசாயி மகன்னா சும்மாவா..!

0 2553

சென்னை மாதவரம் அருகே திருமணம் முடிந்த கையோடு, புதுமண தம்பதி ரேக்ளா வண்டியில் அதிவேகத்தில் ஊர்வலம் போன சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது..

பொண்ணும், மாப்பிள்ளையும் ஜோடியா மின்னல் வேகத்தில் ரேக்ளா வண்டியில் செல்வதை வைத்து , கல்யாண பொண்ண மாப்பிள்ளை கடத்திட்டு போறார்ன்னு தப்பா நினைத்து விடாதீர்கள்....

ஜோடியா போகிற இவங்க சென்னையை சேர்ந்த புதுமண தம்பதின்னா உங்களால நம்ப முடியுதா ? நம்பித்தான் ஆகணும்..!

சென்னை மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த விவசாயி கோபால் கண்ணகி தம்பதியரின் மகனான விஜய் தான் இந்த மாப்பிள்ளை , ஆனந்தன் மேரி தம்பதியரின் மகளான ரம்யா தான் பொண்ணு.. !

இவர்கள் இருவருக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு குலதெய்வம் கோயிலில் திருமணம் நடைபெற்றது. மணமக்கள் வீடு திரும்பும் பொழுது தங்களது பாரம்பரியத்தை மறக்காமல் இருக்கும் வகையில் இரண்டு மாடுகள் பூட்டப்பட்ட ரேக்ளா வண்டியில் மணமகன் விஜய் மணமகள் ரம்யாவை ஏற்றிக்கொண்டு சென்னை வெளிவட்டச் சாலையில் ஊர்வலமாக சென்றார்.. இல்லை இல்லை பறந்தார்..!

உறவினர்களும் நண்பர்களும் மகிழ்ச்சியுடன் மணமக்கள் மீது மலர்களை தூவி வாழ்த்தியவரே இரு சக்கரவாகனங்களில் பின் தொடர்ந்தனர்.

பென்ஸ் ஜாக்குவார் கார்களை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வாடகைக்கு எடுத்து திருமண ஊர்வலம் நடத்துவோர் மத்தியில் சிக்கனமாக தங்களிடம் உள்ள ரேக்ளா மாட்டு வண்டியில் காற்றை கிழித்துக் கொண்டு ஊர்வலம் சென்ற மணமக்களை அந்தவழியாக சென்றவர்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments