கேரளாவில், சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்து விபத்து.. நிறைமாத கர்ப்பிணி, கணவர் உயிரிழப்பு..!

கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பிரசவ வலியுடன் நிறைமாத கர்ப்பிணியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அவர்கள் பயணித்த மாருதி சுசுகி எஸ்பிரஸோ கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.
பின் இருக்கையில் இருந்த 3 பெண்களும், ஒரு குழந்தையும் காரை விட்டு வெளியேறிய நிலையில், முன்பக்கம் தீ வேகமாகப் பரவியதால், முன்னிருக்கையில் அமர்ந்திருந்த கர்ப்பிணியும், அவரது கணவரும் காருக்குள்ளேயே சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
Comments