பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம்..!

பாலஸ்தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் ராணுவம் இரவு நேரத்தில் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியது.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் நிலவி வரும் நிலையில், காஸா பகுதியிலிருந்து தங்களது நாட்டிற்குள் ஏவப்பட்ட ராக்கெட்டை வழிமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காஸாவிலிருந்து மீண்டும் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சைரன் தங்களுக்கு ஒலித்ததால் பதில் தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ராக்கெட் வீச்சில் கட்டடங்கள் தீப்பிடித்து எரியும் காட்சிகள் வெளியான நிலையில் உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
Comments