நகராட்சி அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததால் வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் வாடகை பாக்கி செலுத்தாத கடைகளை இழுத்துபூட்டி வருவாய் அலுவலர் பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள் செவ்வாய்கிழமையன்று சீல் வைத்தனர்.
கடந்த மாதம் வரை வாடகை செலுத்தியுள்ளதாகவும், வாடகை பாக்கி செலுத்த காலஅவகாசம் உள்ளதாக கூறி சில வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து நகராட்சி அதிகாரிகளுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளில் இருந்த சீலை அகற்றினர்.
Comments