பிரதமர் மோடி ஜூன் - ஜூலை மாதத்தில் அமெரிக்கா பயணம்.. அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பு..!

பிரதமர் மோடி ஜூன் - ஜூலை மாதத்தில் அமெரிக்கா பயணம்.. அதிபர் பைடன் வெள்ளை மாளிகையில் அளிக்கும் விருந்தில் பங்கேற்பு..!
வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ளார்.
அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அரசுமுறைப் பயணமாகச் செல்லும் பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் ஜோ பைடனும் இருதரப்பு உறவுகள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார்.
2009 இல் அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விருந்தளித்தார். ஜோபைடன் அதிபரான பின் பிரான்ஸ் அதிபர் மேக்ரன் மட்டுமே அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இதுவரை அமெரிக்க அதிபர்களை மோடி பலமுறை சந்தித்தபோதும், அரசுமுறைப் பயணமாக இந்தாண்டுதான் செல்லவிருக்கிறார். வெள்ளைமாளிகையில் ஜோ பைடன் அளிக்கும் விருந்தில் பங்கேற்பதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்திலும் மோடி உரையாற்ற உள்ளார்.
Comments