''பேசாம சூப்பர் ஸ்டார் பட்டத்தை என்கிட்ட கொடுத்துருங்க..'' - கூல் சுரேஷ்..!

சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன்பா இவ்வளவு பேர் அடிச்சிக்கிறீங்க, நான் சும்மா தானே இருக்கேன் என்கிட்ட கொடுங்க, அப்புறமா பேசி முடிச்சிட்டு வந்து வாங்கிக்கங்க என்று கூலாக பேசி திரை உலகை காமெடி நடிகர் கூல் சுரேஷ் அதிர வைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக சென்னை விமான நிலையத்தில் புதியதாக துவங்கப்பட்ட பிவிஆர் சினிமாஸ் திறப்பு விழாவில் பங்கேற்ற கூல்சுரேஷ், தான் நடித்து வரும் பகாசூரன் படம் பேசப்படலைன்னா திரைத்துறையில் இருந்து ஒதுங்கி, கொத்தனார் வேலைக்கோ, கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கவோ போக வேண்டியது தான் என்று நொந்துக் கொண்டார்.
Comments