மத்திய பட்ஜெட் குறித்து என்ன சொல்கிறார்கள்.? நிபுணர்கள் கருத்து இது தான்..

0 1432

2023ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் குறித்து பல்துறை நிபுணர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை விரிவாக பார்க்கலாம்

மத்திய அரசின் பட்ஜெட் வேளாண்துறைக்கு சிறப்புமிக்க பட்ஜெட்டாக உள்ளது என்றும், கிராமப்புறங்களில் ஸ்டார்ட்அப் மூலமாக மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களை சந்தைப்படுத்த முடியும் என்றும் வேளாண்துறை சார் நிதி நிபுணர் எஸ்எம் ஷங்கர் கூறியுள்ளார்.

பொது போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொழிற்துறை சார்ந்த போக்குவரத்தையும் மேம்படுத்தமுடியும் என்று இந்திய தொழிற் கூட்டமைப்பை சேர்ந்த தீபக் கூறியுள்ளார்.

வருமான வரி உச்சவரம்பை அதிகரிப்பால் மக்கள் கையில் கூடுதலாக பணம் இருக்கும்.

உள்நாட்டு பொருளாதாரம் நிலையாக இருக்கும் என்று தென்னிந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த பொருளாதார வல்லுநர் சுதா மெய்யப்பன் கூறியுள்ளார்.

 

2023ஆம் ஆண்டு பட்ஜெட் நாடு முழுவதும் மருத்துவ ஆராய்ச்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் என்று இந்திய தொழிற்கூட்டமைப்பை சேர்ந்த சந்திரகுமார் கூறியுள்ளார்.

தனிநபர் ஆண்டு வருமானம் உச்ச வரம்பு அதிகரிப்பு உள்ளிட்டவை வரவேற்கத்தக்கது என்று இந்திய தொழிற் கூட்டமைப்பின் தென்னிந்திய தலைவர் சி.கே. ரங்கநாதன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments