இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கும் வீடியோ..!

விழுப்புரம் மாவட்டத்தில் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
செஞ்சி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் அரசுப்போக்குவரத்து பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில் உடல்நலக் குறைவால் 10 நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
இந்நிலையில், வெங்கடேசனின் இறப்புச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்த அவரது இளைமகன் சந்திரசேகரிடம் கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி , ஐநூறு ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Comments