கட்டுக்கட்டாக ஊழியர்களுக்கு போனஸ் தொகை கொடுத்த சீன நிறுவனம்

0 2427

உலகின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ் தொகையை வழங்கி இருக்கிறது.

ஹெனான் மாகாணத்தில் இயங்கிவரும் ஹெனன் மைன் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

கொரோனா மற்றும் உலக மந்தநிலை காரணமாக சீனாவும் பொருளாதார நெருக்கடியில் இருந்துவரும் வேளையில், ஹெனன் மைன் நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான்-ஆக அதிகரித்திருக்கிறது.

இதனால், அந்நிறுவனம் பணத்தை மலை போல குவித்து வைத்து ஊழியர்களுக்கு ஊக்கத்தொகையை கட்டுக்கட்டாக வழங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments