கந்துவட்டி கொடுமை : ரூ.20,000 கடனுக்கு வாரந்தோறும் ரூ.2,000 வட்டி வசூல்.. காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் முதியவர் விரக்தி

0 1929
நெல்லையில், கந்துவட்டி கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

நெல்லையில், கந்துவட்டி கொடுமை குறித்து காவல்துறையினரிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி, முதியவர் ஒருவர், ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.

80 வயதான ஆறுமுகம், ஓராண்டுக்கு முன் மலையப்பன் என்பவரிடம் வட்டிக்கு 20 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, அதற்கு வாரந்தோறும் 2000 ரூபாய் வட்டி செலுத்தியுள்ளார்.

கூலித்தொழிலாளியான ஆறுமுகத்தால் 4 மாதங்களாக வட்டி செலுத்த முடியாததால், மலையப்பன் பல முறை வீட்டிற்கு வந்து ஆறுமுகத்தையும், அவரது மனைவியையும் ஆபாசமாகத் திட்டியதாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ஆறுமுகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றபோது, போலீசார் அவரை தடுத்துநிறுத்தினர்.

ஆறுமுகத்தின் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கோபாலன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments