பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்.. 32 பேர் பலி

0 1150
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 32 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதியில் தொழுகையின்போது நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், 32 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

காவலர் குடியிருப்பு அருகில் இருக்கும் அந்த மசூதியில், இன்று மதியம் தொழுகைக்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த போது, ஒரு பயங்கரவாதி தனது தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி 32 பேர் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசாரை குறிவைத்து இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments