தமிழ் இளைஞரை கை-கால்களை கட்டி தொங்கவிட்ட வடமாநிலத்தவர்.. இப்போ கூலிப்படையாக புரமோசன்..!

0 6391

கிருஷ்ணகிரி அடுத்த ஊத்தங்கரையில் வடமாநில இளைஞர்களை கூலிப்படையாக்கி, தமிழக இளைஞரை கைகால்களை கட்டி தூக்கி துன்புறுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

கிருஷ்ணகிரியை அடுத்த சின்னாறு என்ற இடத்தில், காய்கறிகளை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு எக்ஸ்போர்ட் செய்யக்கூடிய நிறுவனத்தின் கட்டுமான பணி நடந்து வருகிறது.

இந்த கட்டுமான பணியில் ஊத்தங்கரையை சேர்ந்த நாராயணன் என்பவர், தண்ணீர் தொட்டி கட்டுவதற்காக சப் காண்ட்ராக்ட் எடுத்து வேலை செய்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு, தனது கான்ட்ராக்டர் பணியை முடித்துவிட்டு, அவர் ஊத்தங்கரை பகுதிக்கு வந்த நிலையில், அவர் கட்டுமான பணிக்காக வைக்கப்பட்டிருந்த 2 டன் எடையுள்ள இரும்பு கம்பிகளை எடுத்துச்சென்றுவிட்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில் நாராயணனின் அண்ணன் மகன் பிரபாகரன் என்பவர் தனது சித்தப்பாவை தேடி நிறுவனத்திற்கு சென்றுள்ளார்.

அங்குள்ள காவலாளிகள் நாராயணனுக்கு பதிலாக, பிரபாகரனை பிடித்து கயிற்றில் கட்டி வைத்து, வடமாநில தொழிலாளர்களை ஏவி சித்திரவதை செய்து வருவதாக, நாராயணன் புகார் தெரிவித்துள்ளார்.

எம் ஆர் அண்ட் கோ என்ற அந்த நிறுவனத்தின் உரிமையாளரான ஓசூர் மணி என்பவர், வடமாநில தொழிலாளர்களை கூலிப்படை போல பயன்படுத்தி, தனது அண்ணன் மகனை சித்ரவதை செய்து வருவதாகவும், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து மீட்கும்படி மிரட்டுவதாகவும் நாராயணன் தெரிவித்தார்.

சித்ரவதைக்குள்ளான இளைஞரை மீட்க, போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments