திருப்பூர் சம்பவம் - பீகாரைச் சேர்ந்த 2 பேர் 3 பிரிவுகளில் கைது..!
திருப்பூரில், தமிழக இளைஞர்களை வடமாநிலத்தவர்கள் விரட்டுவது போல வீடியோ வெளியான விவகாரத்தில், வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனவரி 14ம் தேதி நடந்த சம்பவம், தனிப்பட்ட நபர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்றும், தமிழக இளைஞர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்புவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், திருப்பூர் மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்த ரஜத்குமார், பரேஷ்ராம் ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீசார், ஆயுதங்களுடன் ஒன்றுகூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதில் தொடர்புடைய மேலும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Comments