மக்களுடன் மக்களாக தரையில் அமர்ந்து பிரதமரின் மனதின் குரல் உரையை கேட்ட அண்ணாமலை..!

மக்களுடன் மக்களாக தரையில் அமர்ந்து பிரதமரின் மனதின் குரல் உரையை கேட்ட அண்ணாமலை..!
சென்னை அடுத்த ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் மக்களுடன் இணைந்து பிரதமரின் மனதின் குரல் உரையை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கேட்டார்.
ஆண்டின் முதல் மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிறுக்கிழமையன்று நடைபெற்ற நிலையில், ஒட்டியம்பாக்கத்தில் பாஜக சார்பில் அந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
மக்களுடன் தரையில் அமர்ந்து உரையை கேட்டபின் பேசிய அண்ணாமலை, பிரதமரின் உரையை கேட்க மக்கள் ஆர்வத்துடன் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.
மேலும், நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 100 இடங்களில் பாஜக சார்பில் ஒளிபரப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments