காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது - தலைமறைவான தாய், தந்தைக்கு வலைவீச்சு..!

காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது - தலைமறைவான தாய், தந்தைக்கு வலைவீச்சு..!
தென்காசியில், தமிழ்நாட்டு இளைஞரை காதல் திருமணம் செய்த குஜராத்தி பெண், உறவினர்களால் கடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மர அறுவை ஆலை அதிபர் நவீன் படேலின் எதிர்ப்பை மீறி அவரது மகள் கிருத்திகாவும், வினித் என்பவரும் திருமணம் செய்திருந்தனர். கடந்த புதன்கிழமை, நவீன் பட்டேலின் குடும்பத்தினர் பொதுவெவெளியில் வினித்தை தாக்கி கிருத்திகாவை குண்டுகட்டாக காரில் கடத்தி சென்றனர்.
கிருத்திகாவின் தாய், தந்தை உள்பட 7 பேரை போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில், உறவினர்களான முகேஷ் படேல், தினேஷ் படேல், அவர்களுக்கு உதவிய சுப்ரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருத்திகா, குஜராத் மாநிலத்திற்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டதாக அப்பகுதியில் தகவல் பரவிவருகிறது.
Comments