கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் பணம் வசூலித்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்.. பொதுமக்கள் போராட்டம்..!

கவர்ச்சிகரமான திட்டங்கள் மூலம் பணம் வசூலித்து தலைமறைவான நகைக்கடை உரிமையாளர்.. பொதுமக்கள் போராட்டம்..!
தஞ்சாவூரில், கவர்ச்சிகரமான விளம்பரங்களின் மூலம் ஏராளமானோரிடம் லட்சக்கணக்கான பணத்தை வசூல் செய்த நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான நிலையில், நகைக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர் மட்டுமின்றி திருக்காட்டுப்பள்ளி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கிளைகளுடன் செயல்பட்டுவரும் அசோகன் தங்க மாளிகையில் நகை சிறுசேமிப்பு, நகைகளுக்கு வட்டியில்லா கடன், வீட்டுமனை சிறுசேமிப்பு உள்ளிட்ட திட்டங்களில் ஏராளமான பொதுமக்கள் சேர்ந்து பணம் கட்டியுள்ளனர்.
மேலும் வேறு இடங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகையை மீட்டு, வட்டி இல்லா நகைக்கடன் என்ற ஆசையில் அசோகன் நகைக்கடையில் அடகு வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடையில் உள்ள தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு கடைகளை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
Comments