காவல்துறையினரை கேவலமாக விமர்சித்து விடுதலை சிறுத்தை ஊர்வலம்.. கைது செய்த ஆத்திரத்தில் கோஷம்..!

0 2586

ஆரணியில் காவல்துறையினரை தரக்குறைவாக விமர்சித்து கோஷமிட்டபடி விடுதலை சிறுத்தை கட்சியினர் அனுமதியின்றி ஊரவலம் நடத்தியதால் பரபரப்பு..

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 8ம் தேதி அன்று இடம் தொடர்பான புகாரில் காவல்நிலையத்தில் விசாரணைக்கு வந்த விடுதலைசிறுத்தை கட்சி மாவட்ட
செயலாளர் ம.கு.பாஸ்கரன் என்பவர் , ஆரணி நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்து சாதியை குறிப்பிட்டு ஒருமையில் பேசியதால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட விசிக மாவட்ட செயலாளர் ம.கு.பாஸ்கரனுக்கு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டது பிணையில் வந்த பாஸ்கரனை ஆரணி மாங்காமரம் பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்து சென்றனர். அவர் திறந்த காரின் நின்ற படியே காவல்துறையினரை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் கடுமையாக திட்டியபடி சவால் விட்டுக் கொண்டே சென்றார்

அனுமதியின்றி ஆரணி நகர் முழுவதும் ஊர்வலமாக சென்ற விசிகவினர் காவல் நிலையம் முன்பு செல்லும் போது காவல்துறையே வெளியே வா என்று இன்னும் மோசமான வார்த்தைகளை கூறி காவல்துறையினருக்கு எதிர்ப்பாகவும் கேவலமாகவும் கோஷம் எழுப்பினர்

இதனை காவல் நிலைய வாசலில் இருந்து போலீசார் படம் பிடித்தனர். அதனைப் பார்த்த விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் வீடியோ எடுப்பதை சுட்டிக்காட்டி வெளியே வாடா வெளியே வாடா என்றும் கோஷம் எழுப்பினர்.

இருந்தாலும் எந்த ஒரு காவல்துறையினரும் காவல் நிலையத்தை விட்டு வெளியே வராததால் விசிகவினர் கெத்தாக ஊர்வலமாக சென்றனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது என்ன சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வது என உயர் அதிகாரிகள் , சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், காவல்துறையினரை தரைக்குறைவாக விமர்சித்த விவகாரத்தில் வி.சி.க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உட்பட 50 பேர் மீது பிணையில் வர முடியாத வகையில் 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வி.சி.கவைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள வி.சி.க மாவட்ட செயலாளர் பாஸ்கரனையும் அவரது ஆதராவாளர்களையும் 7 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விவகாரம் ஆரணி நகர பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால், நகர் முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments