பாட்டி என கூறி அங்கன்வாடி மையத்தில் 2 வயது சிறுவனை கடத்த முயற்சித்த மூதாட்டி..

ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்து இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்றதாக பிடிபட்ட மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
ராமநாதபுரத்தில் அங்கன்வாடி மையத்தில் இருந்து இரண்டு வயது சிறுவனை கடத்த முயன்றதாக பிடிபட்ட மூதாட்டியை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு இடைவேளையின்போது, மூதாட்டி ஒருவர், சிறுவனின் பாட்டி என்று கூறி அவனை அழைத்துச் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
அங்கிருந்த பணியாளர்கள் சிறுவனை அனுப்ப மறுத்து மூதாட்டியை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மூதாட்டி ஏற்கனவே இதுபோன்ற கடத்தல்களில் ஈடுபட்டவரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments