இடைத்தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களில் இபிஎஸ் அறிவிப்பார் - செங்கோட்டையன்

ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்பதை, எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையன் தலைமையில் நூற்றிபதினோரு பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், அதிமுக தேர்தல் பணிக்குழுவினர் ஈரோடு திருநகர் காலனியில் சாலையோர கடைகளிலும், வீடுகளிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
Comments