அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவரை சுத்தியலால் தாக்கிய நபர்..

0 1064
அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை, நபர் ஒருவர் வீடு புகுந்து சுத்தியலால் தாக்கிய சம்பவத்தின் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை, நபர் ஒருவர் வீடு புகுந்து சுத்தியலால் தாக்கிய சம்பவத்தின் வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் நான்சி பெலோசி வீட்டில் இல்லாத நேரத்தில், வீடு புகுந்த டிபேப் ஸ்வெட்டர் என்ற அந்த நபர், சுத்தியலால் தாக்கியதில் பால் பெலோசிக்கு மண்டை ஓட்டின் எலும்பு உடைந்தது.

சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்தார். சம்பவ இடத்திலேயே டிபேப் ஸ்வெட்டரை போலீசார் கைது செய்த நிலையில், நான்சி பெலோசியை கடத்துவதற்காகவே தான் வந்ததாக அவன் தெரிவித்தான்.

இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டின் கதவை டிபேப் ஸ்வெட்டர் சுத்தியலால் உடைத்து உள்ளே நுழைந்த வீடியோவும், போலீசார் முன்னிலையிலேயே அவன் பால் பெலோசியை தலையில் சுத்தியலால் அடித்த வீடியோவும் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments