ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி!

0 1816

பிரபல திரைப்பட ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார்.

சென்னை வடபழனி ஸ்டண்ட் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்ட ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு நடிகர்கள் சத்யராஜ், மனோபாலா, கார்த்தி, ராதா ரவி உள்ளிட்ட திரைபிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் ரஜினிகாந்தும் ஜூடோ ரத்தினத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 1976ம் ஆண்டு முதல் ஜூடோ ரத்தினத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், முரட்டுக்காளை படத்தின் வரும் சண்டைக்காட்சியை யாராலும் மறக்க முடியாது என்றும் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments