தென்கொரியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு

0 1283

ஜப்பான் மற்றும் தென் கொரியா இடையேயான கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கியதில் குறைந்தது 8 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜின் தியான் என்று பெயரிடப்பட்ட சரக்குக் கப்பலில் சீனாவைச் சேர்ந்த 14 பேரும், மியான்மரைச் சேர்ந்த 8 பேரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

தென் கொரியா நோக்கிச் சென்ற இந்தக் கப்பல் ஜப்பானின் நாகசாகிக்கு தென்மேற்கே, கடந்த புதன்கிழமை விபத்தில் சிக்கியது. இதையடுத்து மீட்புப் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கப்பல் மூழ்கியதில் 8 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments