அமெரிக்காவில் தொழில்அதிபர் ஒருவர் வயது குறைப்பிற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலர் செலவு செய்கிறார்..!

0 5818

அமெரிக்காவில் 45 வயது தொழில்அதிபர் ஒருவர் தனது உடலை 18 வயதுக்காரரின் உடலமைப்பைப் போன்று மாற்றுவதற்காக ஆண்டுக்கு 2 மில்லியன் டாலரை செலவழிக்க உள்ளதாக அறிவித்து அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ப்ரையன் ஜான்சன் தனது உடலமைப்பை மாற்றுவதற்காக 30 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை உடன் வைத்துக் கொண்டு அவர்கள் தயாரித்துக் கொடுத்த திட்ட அறிக்கையின் படியே காலையில் எழுவது முதல் படுக்கைக்குச் செல்லும் வரையில் நடப்பதோடு, தினமும் ஆயிரத்து 977 கலோரி கிடைக்கும் வகையில் காய்கறிகளையும் சாப்பிட்டு வருகிறார்.

இதன் மூலமாக தனது உடலில் உள்ள செல்களின் வயதை சுமார் 5 ஆண்டுகள் வரையில் குறைத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments