அப்படி என்ன பாட்டு கேட்டிருப்பார்..? பாசிடிவ் vibe பாய்..! ஜாலியா இருந்தா டான்ஸ் வரும்..

0 2124

விடுமுறை நாள் என்பதால் ஹெட் செட்டில் பாடல் கேட்டபடியே சென்னை வீதியில் ஆடிக் கொண்டு சென்ற இளைஞர் ஒருவர் வாகன ஓட்டிகளின் கவனம் ஈர்த்தார். 

குடியரசு தினத்தையொட்டி அரசு விடுமுறை என்பதால் சென்னை பிராட்வே பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அந்த சாலையில் ஹெட் செட்டில் பாடல் கேட்ட படியே ஒரு இளைஞர் ஆடிக் கொண்டே வந்தார்

முகத்தில் மகிழ்ச்சி பொங்க சினிமா நாயகர்கள் உற்சாகமாய் ஆடிக் கொண்டே செல்வது போல எவரை பற்றியும் கூச்சம் கொள்ளாமல் உற்சாகமாக நடனம் ஆடினார்

அப்படி என்ன பாடல் கேட்டுக் கொண்டு வந்திருப்பார்...

பக்கத்தில் எந்த ரஞ்சிதமும் இல்லாமல் சிங்கிளா ஆடிட்டி வர்ரார், அப்படின்னா அந்த பாடலாக இருக்க வாய்ப்பில்லை.. ஒரு வேள சில்லா சில்லா பாடலாக இருக்குமோ..?

நம்ம செய்தியாளர் அந்த vibe பாயை மறித்துக் கேட்டதும் , இன்னிக்கு லீவுல்ல.. அதான் அப்படியே ஜாலியா ஹெல்செட்டில் பாட்டு கேட்டபடி வீட்டுக்கு செல்வதாக புன்னகையுடன் பதில் அளித்தார்

கடைசிவரை தான் ஹெட் செட்டில் கேட்டது என்ன பாடல் என்பதை சொல்லாமல் ரெட்டேரிக்கு பேருந்து ஏறுவதற்காக நடையை கட்டியது அந்த கான மயில் கணேஷ்..!

ஹெட் செட்டில் பாடல் கேட்பதோ, ஆடுவதோ தவறில்லை அதே நேரத்தில் சாலையில் இது போன்று ஹெட் செட் பாடலில் மூழ்கியபடி செல்வதால் பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஒலி கேட்காமல் விபத்தில் சிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றனர் போலீசார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments