முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி, தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் திருப்பதியில் சாமி தரிசனம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தனது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சண்டுடன் சாமி தரிசனம் செய்தார்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிச்சயம் கடந்த வாரம் மும்பையில் நடைபெற்றது.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்த அவர்கள், இன்று அதிகாலை நடைபெற்ற திருப்பாவாடை சேவையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
Comments