இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த மர்ம நபர்கள்..!

0 2245

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறித்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்புறம்பியம் பாலக்கரை மேலத்தெருவை சேர்ந்த ஸ்டாலின் - மாலா தம்பதியினர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகின்றனர்.

இருவரும் கடைக்கு தேவையான சாமான்களை வாங்குவதற்காக இரு சக்கர வாகனத்தில் கும்பகோணம் சென்றனர்.

பின்னர் வீடு திரும்பிய அவர்கள் கொட்டையூரில் வேகத் தடையை கடப்பதற்காக மெதுவாக சென்ற போது அங்கே நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென மாலா கழுத்தில் இருந்த 6 சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டார்.

அப்போது இதனைத்  தடுக்க முயன்ற ஸ்டாலினை அந்த நபர் தாக்கிய போது மாலா தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments